Vivo Y19 5G silently launched in India
சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான Vivo அதன் Vivo Y19 5G இன்று அதாவது மே தொடக்கத்திலே அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி சிப், மற்றும் IPS LCD டிஸ்ப்ளே, டுயல் கேமரா மற்றும் பெரிய பேட்டரி வழங்குகிறது. இதை தவிர இந்த போனின் விளையும் மிக மிக குறைவு தான் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
டிஸ்ப்ளே : Vivo Y19 5G யின் இந்த போனில் 6.74-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இது 90Hz ரெப்ராஸ் ரெட்டுடன் TÜV Rheinland சர்டிபிகேசன் வழங்குகிறது.
பர்போமான்ஸ்: இந்த போனில் பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6300 SoC வழங்குகிறது, இதில் அதிகபட்சமாக 2.4GHz கிளாக் ஸ்பீடில் இயங்குகிறது மேலும் இந்த போன் Android 14 அடிபடையின் கீழ் Funtouch OS யில் வேலை செய்கிறது.
கேமரா: இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் 13MP ப்ரைமரி கேமராவுடன் 0.08MP செகண்டரி கேமரா வழங்குகிறது இதனுடன் இதில் AI அடிபடையின் கீழ் நைட் மோட்,போர்ட்ரைட் மோட் மாற்றும் pro மோட் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இதில் AI Erase, AI Photo Enhance மற்றும் AI Documents போன்ற அம்சங்கள் சப்போர்ட் செய்கிறது.
பேட்டரி: மேலும் இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,500mAh பேட்டரியுடன் இதில் 15W சார்ஜிங் வழங்கப்படுகிறது
மற்றவை: இந்த போன் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது லேசான மழை அல்லது தூறல்களிலிருந்து கூட இந்த போனை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது விரிவான குஷனிங் கட்டமைப்பையும் கொண்டுள்ளது, இது சுவிஸ் SGS ஃபைவ்-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த போனின் டிசைன் 8.19mm திக்னஸ் மற்றும் 199 கிராம் எடை கொண்டது, இது தினசரி பயன்பாட்டில் ஒரு சௌகரியமான உணர்வைத் தருகிறது.
இந்த போனின் விலை தகவல் பற்றி பேசினால் இந்தியாவில் Vivo Y19 5G விலை 4GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகைகளுக்கு ரூ.10,499 யில் தொடங்குகிறது, அதே நேரத்தில் 4GB மற்றும் 128GB வகைகளின் விலை ரூ.11,499 ஆகும். ஹை ரேன்ஜ் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.12,999. இந்த போனை Flipkart, Vivo Indiaவின் e-store மற்றும் ரீடைளர் சேனல் மூலம் வாங்கலாம் இதை தவிர . தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்தி வாங்குபவர்கள் ரூ.750 வரை இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடியையும் பெறலாம்.. இது இரண்டு கலர்களில் வரும்: டைட்டானியம் சில்வர் மற்றும் மெஜஸ்டிக் கிரீன்.
இதையும் படிங்க:Motorola யின் புதிய போன் MediaTek Dimensity 8350 SoC உடன் அறிமுகம்