Vivo X300 Ultra and X300 FE
Vivo இன்று அதன் X-சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸின் கீழ் vivo X300 Ultra மற்றும் X300 FE ஆகிய ஸ்மார்ட்போன்கலை அறிமுகம் செய்துள்ளது மேலும் Vivo X300 Ultra போனை ப்ரீமியம் செக்மண்டின் கீழ் கொண்டு வரப்பட்டது இந்த போனில் வரும் கேமரா 200மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா ஹைலெட் இது ஒரு டிஜிட்டல் கேமராவை போல வேலை செய்கிறது இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo X300 Ultra போனில் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.82-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும். மேலும், உள்ளே, விவோ X300 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும். இந்த போனில் விவோவின் சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 அடிப்டையில் இயங்கும்.
இதன் கேமரா அம்சங்களை பற்றி பேசினால், Vivo X300 Ultra போனில் இதில் மெயின் ப்ரைமரி கேமரா 200MP சென்சார், 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா உடன் வருகிறது மேலும் இந்த போனில் ZEISS கேமரா ப்ரேண்டிங் பெயர் இருப்பதை இதனுடன் இந்த போனில் அட்வான்ஸ்ட் அம்சங்களுடன் 4K வீடியோ ரெக்கார்டிங் எடுக்க முடியும் Dolby Vision. உடன் தெளிவான ஸ்க்ரீன் வழங்க முடியும் இதனுடன் இந்த போனில் செல்பிக்கு 50MP முன் கேமரா கொண்டுள்ளது
இதையும் படிங்க ஐபோன் பிரியர்களுக்கு இது சூப்பர் டூப்பர் ஆபர் iPhone 17 போனில் ஒரே அடியாக ரூ, 11,000 டிஸ்கவுண்ட்
கடைசியாக இந்த போனின் பேட்டரியை பற்றி பேசினால் 6,600mAh பேட்டரி உடன் 100W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
Vivo X300 FE, போனில் 6.31-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த போனில் , ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர், LPDDR5x ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த ஃபோனில் OIS உடன் கூடிய 50MP சோனி IMX921 முதன்மை சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் வழங்கும் 50MP சோனி IMX882 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 90 டிகிரி பார்வைக்கோணத்துடன் கூடிய 50MP செல்ஃபி கேமராவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6,500mAh பேட்டரி உள்ளது. இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமான அர்பன் ஆலிவ் நிறத்திலும், நாய்ர் பிளாக் மற்றும் லிலாக் பர்பிள் கலர்களில் கிடைக்கும்.
Vivo X300 Ultr யின் அடிப்படை வேரியன்ட், 16ஜிபி மற்றும் 512ஜிபி வேரியன்ட்களில் ரூ. 1,59,999 விலையில் கிடைக்கிறது. இந்த போன் மே மாதம் முதல் இ-காமர்ஸ் தளங்கள், விவோ இ-ஸ்டோர், ரீடைளர் கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் கிடைக்கும். இந்த போனில் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் விக்டரி கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கும்.
விவோ X300 FE மாடலின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ. 79,999 விலையிலும், 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ. 89,999 விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும், மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை வழிகள் அனைத்திலும் கிடைக்கும். இது அர்பன் ஆலிவ், லிலாக் பர்பிள் மற்றும் நாய்ர் பிளாக் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கும்.