Vivo V60 with Zeiss camera and 6500mAh Battery launched in India Price
Vivo இன்று அதன் Vivo V60 போனை அறிமுகம் செய்துள்ளது இந்த போனில் மிக சிறப்பு வாய்ந்த ZEISS போர்ட்ரைட் கேமரா வழங்கப்படுகிறது அதே போல தற்பொழுது trend ஆகும் AI போடோக்ரபி எடுக்க முடியும் மேலும் இந்த போனில் 6500Mah பேட்டரி இருந்தாலும் ஸ்லிம்மஸ்ட் போனாக இருக்கும் மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம் வாங்க.
Vivo V60 யின் அம்சங்கள் பற்றி பேசினால், முதலில் இதன் டிஸ்ப்ளே யிலிருந்து 6.77 இன்ச் AMOLED பேனலைக் கொண்டுள்ளது, இது 2392×1080 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. இந்த டிஸ்ப்ளே 60Hz மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் மற்றும் 5000 nits உள்ளூர் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது.
பர்போமான்ஸ் பற்றிப் பேசுகையில், விவோ வி60 ஒரு ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் பொறுத்தவரை, இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பகத்துடன் பல வகைகளில் கிடைக்கிறது. இந்த போனில் LPDDR4X ரேம் மற்றும் UFS 2.2 தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது வெர்ஜுவல் ரேம் அதிகரிக்க விருப்பத்தையும் கொண்டுள்ளது, இது ரேம் வேரியண்டை பொறுத்து 8 ஜிபி + 12 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
இந்த போனில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் ஆண்ட்ராய்டு 15 யில் அடிபடையின் கீழ் FunTouchOS 1 இயங்குகிறது மற்றும் IP68-IP69 மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் கேமரா பற்றி பேசுகையில் V60 யின் பின் கேமரா 50 மெகாபிக்ஸல் ZEISS சூப்பர் டெலிபோட்டோ கேமரா 10X டெலிபோட்டோ போர்ட்ரைட் மற்றும் ZEISS மல்ட்டிபோக்கல் ஜூம் போர்ட்ரைட் மற்றும் இதில் 8MP ZEISS அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Lava யின் புதிய போன் 50MP AI கேமரா அம்சத்துடன் அறிமுகம் குறைந்த விலையில் பக்கா மாஸ் அம்சம்
இதை தவிர இந்த போனில் ஒரு பெரிய 6,500 mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது இதனுடன் இதில் இன் டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்குகிறது.
8GB+128GB ஸ்டோரேஜ் வகை Vivo V60 ரூ.36,999க்கும், 8GB+256GB ஸ்டோரேஜ் வகை ரூ.38,999க்கும், 12GB+256GB ஸ்டோரேஜ் வகை ரூ.40,999க்கும், 16GB+512GB ஸ்டோரேஜ் வகை ரூ.45,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலர் விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த போன் Auspicious Gold, Mist Gray மற்றும் Moonlit Blue ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு e-commerce தளமான Flipkart, Amazon மற்றும் Vivoவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.