விரைவில் ஆண்ட்ராய்டு 11 OS உடன் வரும் Vivo V20 ஸ்மார்ட்போன்

HIGHLIGHTS

Vivo V20 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியது.

திய ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

விரைவில் ஆண்ட்ராய்டு 11 OS உடன் வரும் Vivo V20 ஸ்மார்ட்போன்

Vivo V20 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுடன் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்சமயம் ஐரோப்பாவை தொடர்ந்து விவோ வி20 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி விவோ புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Vivo V20 சிறப்பம்சங்கள்

– 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
– 44 எம்பி பிரைமரி கேமரா
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
– டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

வெளியீட்டிற்கு முன் விவோ தனது வி20 ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. விவோ வி20 ஸ்மார்ட்போன் இந்தியா உள்பட இதர தென்கிழக்கு ஆசிய சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile