Tecno Pova Slim 5G
Tecno யின் இந்த போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இன்று ப்ளிப்கார்டில் Tecno Pova Slim 5G போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் Tecno Pova Slim 5G யின் விலை ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் வாங்கலாம் . இது 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கூல் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்லிம் ஒயிட் கலர் விருப்பங்களில் வருகிறது. இன்று செப்டம்பர் 8 பிளிப்கார்ட் வழியாக விற்பனை தொடங்கும் .மேலும் Flipkart Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ EMI ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
புதிய Tecno Pova Slim 5G போனின் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1224 × 2720 பிக்சல் ரெசளுசன் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . திரையின் ஹை ப்ரைட்னஸ் 4500 நிட்கள் மற்றும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i அடுக்கு உள்ளது. ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லை. இந்த போனில் HiOS 15 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க:Motorola யின் இந்த அல்டிமேட் பர்போமான்ஸ் கொண்ட இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
கேமரா பற்றிப் பேசுகையில், டெக்னோ போனில் பின்புறத்தில் 50MP முதன்மை பின்புற கேமராவும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலுக்காக 13MP முன் கேமராவும் உள்ளன. பின்புற கேமரா 1440p@30fps மற்றும் 1080p@30fps யில் ரெக்கார்டிங் செய்ய முடியும்.
டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி 5160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பிடிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற அடிப்படை கனெக்சன் அம்சங்கள் உள்ளன. போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் அல்ட்ரா-ஸ்லிம் 5.95மிமீ பாடி மற்றும் 156 கிராம் மட்டுமே எடை கொண்டது. இது தவிர, இதற்கு IP64 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது, அதாவது, டஸ்ட் மற்றும் லேசான வாட்டர் ரெசிஸ்டன்ட்பாதுகாக்கப்படுவதாகக் கூறுகிறது.