Tecno POVA ஸ்மார்ட்போன் 6000Mah பேட்டரியுடன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

Tecno Pova ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதன் 4ஜிபி + 64ஜிபி விலை ரூ. 9,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Tecno POVA ஸ்மார்ட்போன் 6000Mah பேட்டரியுடன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஏஐ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஹை ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டெக்னோ பூவா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல்.

டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஸ்பீடு பர்ப்பிள், டேசில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4ஜிபி + 64ஜிபி விலை ரூ. 9,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile