Tecno Camon 19 series ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்ஸல் யின் RGBW கேமராவுடன் அறிமுகம்.
டெக்னோ செவ்வாயன்று டெக்னோ கேமன் 19 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது
டெக்னோ கேமன் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே மீடியாடெக் ஹீலியோ ஜி85 செயலி மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன
. 5000mAh பேட்டரி கொண்ட போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
டெக்னோ செவ்வாயன்று டெக்னோ கேமன் 19 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் கீழ் Camon 19 மற்றும் Camon 19 Neo ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டெக்னோ கேமன் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே மீடியாடெக் ஹீலியோ ஜி85 செயலி மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. 5000mAh பேட்டரி கொண்ட போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த போனில் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கப் போகின்றன
SurveyTecno Camon 19 series சிறப்பம்சம்.
இதில் 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் எல்.இ.டி டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் ஹீலியோ ஜி85 புராசஸரை கொண்டுள்ளது.
டெக்னோ கேமான் 19 மாடல் ஸ்மாட்போனில் 64 மெகாபிக்சல் ரியர் கேமராவும் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெற்று உள்ளது. டெக்னோ கேமான் 19 நியோவில் 48 மெகாபிக்சல் ரியர் கேமராவும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெற்று உள்ளது. இந்த இரண்டு போன்களிலும் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இது 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
Tecno Camon 19 series விலை தகவல்.
கேமான் 19 நியோ மாடல் டிரீம்லேண்ட் கிரீன், ஐஸ் மிரர் மற்றும் எக்கோ பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எக்கோ பிளாக், சீ சால்ட் ஒயிட் மற்றும் ஜியோமெட்ரிக் கிரீன் கலர் ஆகிய நிறங்களில் வரும் கேமான் 19 மாடலின் விலை ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
