TECNO CAMON 16, 64Mp குவாட் கேமரா மற்றும் 5000MAH பேட்டரியுடன் அறிமுகமானது.

HIGHLIGHTS

இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

TECNO CAMON 16, 64Mp குவாட் கேமரா மற்றும் 5000MAH  பேட்டரியுடன் அறிமுகமானது.

டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TECNO CAMON 16 சிறப்பம்சங்கள்

– 6.8 இன்ச் 1640×720 பிக்சல் HD+ 20.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
– ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஹைஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 64 எம்பி, f/1.79 பிரைமரி கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– ஏஐ லென்ஸ்
– 16 எம்பி செல்பி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேமரா சென்சார்களுடன் பல்வேறு ஆப்ஷன்களில் புகைப்படங்களை அழகாக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

விலை மற்றும் விற்பனை 

டெக்னோ கேமான் 16 ஸ்மார்ட்போன் கிளவுட் வைட் மற்றும் பியூரிஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile