குறைந்த விலையில் Samsung Galaxy M13 Series ஜூலை 14, 2022 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யும்.

HIGHLIGHTS

சாம்சங், ஜூலை 14, 2022 அன்று இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான Galaxy M13 5G மற்றும் Galaxy M13 ஐ அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாக புதன்கிழமை அறிவித்தது

Galaxy M13 5G ஆனது 11 பேண்ட் ஆதரவுடன் 5G இணைப்பைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது

M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது

குறைந்த விலையில் Samsung Galaxy M13 Series   ஜூலை 14, 2022 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யும்.

எலெக்ட்ரோனிக்  பிராண்டான சாம்சங், ஜூலை 14, 2022 அன்று இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான Galaxy M13 5G மற்றும் Galaxy M13 ஐ அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாக புதன்கிழமை அறிவித்தது. Galaxy M13 5G ஆனது 11 பேண்ட் ஆதரவுடன் 5G இணைப்பைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ரேம் பிளஸ் உள்ளது, இது 12ஜிபி வரையிலான ரேம் சேமிப்பகத்தையும் புதுமையான ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங்கையும் வழங்குகிறது, இது பயனர்களின் முதன்மை சிம் நெட்வொர்க்கிற்கு வெளியே இருந்தாலும் தொடர்ந்து இணைந்திருக்க அனுமதிக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. மேலும் இது பிளாக் மற்றும் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. இது கிரீன் மற்றும் புரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் இது 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் வரும் என்றும் டைமென்சிட்டி 700 புராசஸரை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile