Samsung galaxy Z flip4 AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்.

Samsung galaxy Z flip4  AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை ப்ளிப் போன், கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலை அறிமுகம் செய்தது.

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் புளூ, பின்க் கோல்டு, கிராபைட் மற்றும் போரா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது

இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரத்து 440 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை ப்ளிப் போன், கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை தகவல் 

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் புளூ, பின்க் கோல்டு, கிராபைட் மற்றும் போரா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 ஆயிரத்து 185 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 1,179.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரத்து 440 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 சிறப்பம்சம்.

இத்துடன் 1.9 இன்ச் அளவில் எக்ஸ்டெர்னல்/கவர் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது நோட்டிபிகேஷன், மெசேஜ் உள்ளிட்ட விவரங்களை போனினை திறக்கமாலேயே பார்க்க வழி செய்கிறது. பிளெக்ஸ்கேம் அம்சத்தை ஆக்டிவேட் செய்து கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலில் க்ரூப் செல்பி அல்லது வீடியோக்களை படமாக்க முடியும்.

புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 65 சதவீதம் வரை அதிக ப்ரைட்னஸ் சென்சார் கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo