Samusng Galaxy Unpacked 2026 நிகழ்வுக்கு நாள் குருசாச்சு இந்த தேதியின் சாம்சங்கின் புது போன் அறிமுகமாகும்

Updated on 11-Feb-2026

புதிய Samsung Galaxy S26 சீரிஸ் வாங்குவதற்க்கு அதற்க்கான அறிமுகத்திற்காக காத்து கொண்டிருந்தால், உங்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும் அதாவது Samusng Galaxy Unpacked 2026 நிகழ்வு தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது சம்சங்குன் இந்த நிகழ்வானது இந்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வின்போது Galaxy S26 சீரிஸ் உடன் இன்னும் பல டிவைஸ் அறிமுகமாக இருக்கிறது, மேலும் நிறுவனம் இம்முறை அதன் முழு கவனமும் Galaxy AI” மேல் இருக்கும் என கூறப்படுகிறது தற்பொழுது AI உலகத்தில் உங்களை ஸ்மார்ட்டாக மாற்றும் மேலும் நிகழ்வின் தேதி மற்றும் பல விவரங்களை பற்றி அறிவோம் வாங்க.

Samsung Galaxy Unpacked 2026 நிகழ்வு எங்கு எப்பொழுது நடக்கும்?

Samsung யின் நியூஸ் ரூம் போஸ்ட்டின்படி , Samsung Galaxy Unpacked 2026 இந்த மாதம் பிப்ரவரி 25 அன்று நடைபெற இருக்கிறது சென் ப்ரன்சிகொவில் நடைபெறும் இந்திய நேரப்படி இந்த சாம்சங் நிகழ்வானது 11:30 மணிக்கு நடைபெறும், இந்த நிகழ்வானது Samsung யின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் Youtube சேனலில் லைவாக பார்க்கலாம்.

இந்த நிகழ்வில் என்ன என்ன டிவைஸ் அறிமுகமாகும்?

Samsung Galaxy Unpacked 2026 நிகழ்வில் Samsung Galaxy S26 Series அறிமுகம் செய்யும் இந்த சீரிஸின் கீழ் Samsung Galaxy S26, Samsung Galaxy S26+ மற்றும் Samsung Galaxy S26 Ultra போன்றவை அடங்கியுள்ளது, இந்த சீரிஸ் பற்றி நிறுவனம் கூறியது என்னவென்றால் இந்த சீரிஸ் மூலம் எந்த வித வேலைகளையும் சுலபமாக முடிக்க முடியும் மற்றும் இதில் Galaxy AI இன்டிக்ரெட் செய்யப்படுவதால் உங்கள் போன் மிகவும் ஸ்மார்ட்டாக மாறிடும்

இதையும் படிங்க::UPI மூலம் உடனடியாக எடுக்கலாம் சேர்த்து வைக்கப்பட்ட PF பணம், EPFO கொண்டு வருகிறது புதிய ஆப் நன்மை என்ன பாருங்க

ஸ்மார்ட்போன்களுடன், சாம்சங் இந்த நிகழ்வில் புதிய வயர்லெஸ் இயர்பட்களான Samsung Galaxy Buds 4 மற்றும் Samsung Galaxy Buds 4 Pro ஆகியவற்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை மேம்பட்ட ஒலி தரம் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிங் மற்றும் சலுகைகள்

இந்தியா உட்பட பல நாடுகளில் கேலக்ஸி S26 தொடர் மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 வரிசைக்கான முன்பதிவுகளை சாம்சங் திறந்துள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் ₹999க்கு கேலக்ஸி முன்பதிவு VIP பாஸைப் பெறலாம். முன்பதிவு செய்தவுடன், பயனர்கள் ₹5,000 வரை மதிப்புள்ள e-Store வவுச்சரைப் பெறுவார்கள், அத்துடன் ₹50,000 மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கான நுழைவும் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :