Samsung Galaxy S21 FE 5G போன் பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம்.
சாம்சங் இறுதியாக Samsung Galaxy S21 FE 5G ஐ அறிமுகப்படுத்தியது
Galaxy S21 FE 5G தற்போது அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சாம்சங் போன் ஐபோன் 12 தொடருடன் போட்டியிடும்.
அனைத்து லீக்களுக்கும் பிறகு, சாம்சங் இறுதியாக Samsung Galaxy S21 FE 5G ஐ அறிமுகப்படுத்தியது. Galaxy S21 FE 5G பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போன் வடிவமைப்பும் கவர்ச்சிகரமானதாக உள்ளது மற்றும் இது ஒரு ப்ரோ கிரேடு கேமராவைக் கொண்டுள்ளது. Galaxy S21 FE 5G தற்போது அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் அதன் கிடைக்கும் தன்மை குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. Galaxy S21 FE ஆனது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy S20 FE 5G இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். விலையைப் பொறுத்தவரை, இந்த புதிய சாம்சங் போன் ஐபோன் 12 தொடருடன் போட்டியிடும்.
Surveyகேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி விலை தகவல்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. வைட், லாவெண்டர், கிராபைட் மற்றும் ஆலிவ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி.+128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி.+256 ஜி.பி. விலை முறையே 699.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 52,215 என்றும் 8 ஜி.பி.+256 ஜி.பி. விலை 769.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 57,340 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. அம்சங்கள்
– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4
– சிங்கில் / டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா
– 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
– 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
– 32 எம்.பி. செல்பி கேமரா
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ்
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி போனில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்ற நாடுகளில் எக்சைனோஸ் 2100 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12, 5ஜி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது..
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
