6000mAh பேட்டரி மற்றும் 48 மெகாபிக்ஸல் கேமராவுடன் Samsung Galaxy M21 2021 Edition அறிமுகமானது.

Updated on 21-Jul-2021
HIGHLIGHTS

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

சாம்சங் ISOCELL GM2 சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் அம்சங்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் பின்புறம் புது பேனல் டிசைன், 48 எம்பி சாம்சங் ISOCELL GM2 சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Samsung Galaxy M21 2021 Edition

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இவ்விழாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Samsung Galaxy M21 2021 Edition  சிறப்பம்சங்கள் 
 
Samsung Galaxy M21 2021 Edition  அம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா உள்ளது.

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்க்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :