samsung a57 a37
Samsung இன்று இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Samsung Galaxy A57 5G மற்றும் Samsung Galaxy A37 5G போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த இரண்டு போனிலும் ஒரே மாதுரியான அம்சங்கள் வருகிறது, இருப்பினும், கேமரா பிங்கர்ப்ரிண்டின் கீழ் Galaxy A57 5G யில் அப்க்ரேட் பார்க்க முடிகிறது மேலும் இந்த இரு போனிலும் 6.7-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த இரண்டு போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A57 5G மாடலை 8GB ரேம் + 256GB மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையே ₹56,999 மற்றும் ₹62,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி A37 5G மாடல் 8GB + 128GB, 8GB + 256GB, மற்றும் 12GB + 256GB வேரியன்ட்களில் முறையே ₹41,999, ₹47,499, மற்றும் ₹52,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசானில் புக்கிங் கிடைக்கின்றன, மேலும் ஏப்ரல் 2 ஆம் தேதி இது விற்பனைக்கு என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி A57 5G, Awesome Navy, Awesome Icyblue மற்றும் Awesome Lilac ஆகிய வண்ணங்களிலும், கேலக்ஸி A37 5G, Awesome Lavender, Awesome Charcoal மற்றும் Awesome Graygreen ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
Samsung Galaxy A57 5G போனில் 6.7-இன்ச் கொண்டFHD+ Super AMOLED+ டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் Vision Booster அம்சம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனின் ஸ்க்ரீனில், ஸ்மூத் ஸ்க்ரோலிங் மற்றும் ப்ரைட் அவுட்டோர் பார்வைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Exynos 1680 சிப்செட் ப்ரோசெசர் வழங்குகிறது இது 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் உடன், 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
கேமரா செட்டப் அம்சங்கள் பற்றி பேசினால், Galaxy A57 5G போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 50MP மெயின் கேமரா (f/1.8) அப்ராஜர் உடன் 12MP அல்ட்ரா வைட் கேமரா (f/2.2) அப்ரட்ஜர் மற்றும் இதில் 5MP யின் மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இதன் முன் பக்கத்தில் 12MP யின் செல்பி கேமராவுடன் (f/2.2) அப்ரட்ஜர் உடன் வருகிறது
மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் வருகிறது இதை தவிர இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் One UI 8.5 வேலை செய்கிறது.
இதையும் படிங்க தினுசு தினுசா யோசிக்கும் Realme, முதல் முறையாக செல்ஃபி மிரர் கேமரா ஃபோன் மார்கெட்டில் என்ட்ரிக்கு ரெடி
Samsung Galaxy A37 5G போனில் 6.7-இன்ச் கொண்ட FHD+ Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் Vision Booster உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம், மேலும் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அப்சங்களில் கிடைக்கிறது.
கேலக்ஸி A37 5G-யின் கேமரா அமைப்பில் 50MP ப்ரைம் கேமரா (f/1.8), 8MP அல்ட்ரா-வைட் கேமரா (f/2.2) மற்றும் 5MP மேக்ரோ கேமரா (f/2.4) ஆகியவை அடங்கும். 12MP முன்பக்க கேமரா (f/2.2) அப்ரட்ஜர் வசதியும் உள்ளது. இந்த ஃபோனில் 5000mAh பேட்டரியும் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் யுஐ 8.5-ல் இயங்குகிறது, இது சமீபத்திய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்குகிறது. கேலக்ஸி A37 5G-யின் டைமென்ஷன் 162.9 × 78.2 × 7.4 mm மற்றும் இதன் எடை 196 கிராம் ஆகும். இது IP68 ரேட்டிங் மற்றும் சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.