ஆப்பிள் ஐபோன் X தலைமுறையின் புதிய 6.5 இன்ச் வகையில் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது

ஆப்பிள் ஐபோன் X தலைமுறையின் புதிய 6.5 இன்ச் வகையில் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது
HIGHLIGHTS

ஆப்பிள் ஒரு புதிய சாதனம் 6.5 OLED டிஸ்பிளே மற்றும் நோட்ச் உடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது

ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் வெபிசிடிட்டில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

கேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo