இன்று, Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max விற்பனைக்கு உள்ளன. விற்பனை அமேசான் இந்தியா மற்றும் Mi.com யில் மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும். ரெட்மி நோட் 9 ப்ரோவின் ஆரம்ப விலை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் வகைகளில் ரூ .13,999 ஆகும். அதே நேரத்தில், ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது, இதன் விலை ரூ .16,999 யில் ஆரம்பமாகிறது .மேலும் பல தகவலுக்கு அமேசான் வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
REDMI NOTE 9 PRO ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் HD பிளஸ் LCD . ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இத்துடன் இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறம் 16 எம்.பி. கேமராவும்,வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன.