REDMI NOTE 9 இப்பொழுது புதிய கருப்பு நிறத்தில் அறிமுகம்.

HIGHLIGHTS

Redmi Note 9 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

ரெட்மி நோட் 9 ஐந்தாவதாக புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

REDMI NOTE 9 இப்பொழுது  புதிய கருப்பு நிறத்தில் அறிமுகம்.

சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், ஆர்க்டிக் வைட் மற்றும் பெபிள் கிரே என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
பின் அமேசான் பிரைம் டே விற்பனைக்கு முந்தைய தினத்தில் ஸ்கார்லெட் ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் ரெட்மி நோட் 9 ஐந்தாவதாக புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக்  ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

விலை தகவல் 

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் ஷேடோ பிளாக் வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இது ரூ. 10,999 விலையில் எம்ஐ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் ஷேடோ பிளாக் வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இது ரூ. 10,999 விலையில் எம்ஐ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile