108 எம்பி கேமராவுடன் தயாராகும் Redmi நோட் 10 ஸ்மார்ட்போன்

HIGHLIGHTS

ரெட்மி நோட் 10 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ரெட்மி நோட் 10 சீரிஸ் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது

108 எம்பி  கேமராவுடன்  தயாராகும் Redmi நோட் 10 ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட்மி நோட் 10 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
 
சீன டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்களின் படி ரெட்மி நோட் 10 சீரிஸ் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் 5ஜி வசதி மற்றும் உயர் ரக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி நோட் 10 மாடல் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான எம்ஐ 10டி லைட் மாடலை தழுவி உருவாகும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி சென்சாருடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதனுடன் ஒற்றை மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 10 சீரிஸ் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் இந்த சீரிஸ் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இதன் இந்திய வேரியண்ட்டில் 5ஜி சிப்செட் நீக்கப்பட்டு ஸ்னாப்டிராகன் 720ஜி 4ஜி சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 108 எம்பி சென்சார் ப்ரோ வேரியண்ட்டில் வழங்கப்படும் என்றும் இந்த வேரியண்ட்டில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile