Redmi K50i ஸ்மார்ட்போனில் 5G சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது.

HIGHLIGHTS

ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 20-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

Redmi K50i ஸ்மார்ட்போனில் 5G சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது.

ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 20-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், ரெட்மி K50i ஸ்மார்ட்போனில் 5ஜி சோதனை நடத்தப்படுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த 5ஜி சோதனையை நடத்தியதாகவும், இதன் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 12 5ஜி பேண்ட்களுடன் கூடிய முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த K50i மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வர உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile