ரியல்மி 1 இன்று மீண்டும் அமேசான் இந்தியாவில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

ஒப்போ நிறுவனத்தின் சப்-பிரான்டு ரியல்மி 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டே நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது

ரியல்மி 1  இன்று  மீண்டும் அமேசான் இந்தியாவில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

ஒப்போ நிறுவனத்தின் சப்-பிரான்டு ரியல்மி 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டே நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து ஜூன் 1ஆகிய இந்து பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரண்டுமே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக கூறப்பட்டது . 

இதுதவிர அமேசான் இந்தியா வெப்சைட்டில் அதிகம் விற்பனையான சாதனங்களில் ஒன்றாக ரியல்மி 1 அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் விற்பனை இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த நிலையில் அடுத்த விற்பனை ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதேவ் ஷெத் தெரிவித்திருக்கிறார். இத்துடன் முதல் விற்பனைக்கு கிடைத்த வரவேற்புக்கு இந்திய வாடிக்கைாயளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஃபிளாஷ் விற்பனைக்கு நாங்கள் திட்டமிடவில்லை, எனினும் இந்திய வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் வரவேற்பு நாங்கள் எதிர்பாராத ஒன்று. வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தயாரிப்பு பணிகளை அதிகரித்து இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவிவித்துள்ளார்.

ரியல்மி 1 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
– மாலி-G72 MP3 GPU
– 3 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3410 எம்ஏஹெச் பேட்டரி

ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் டையமன்ட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.8,990 மற்றும் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் மேலும் பல ஒபிபிர் இருக்கிறது ஜியோவின் 4850 ஆபர்  பெனிபிட் பெறலாம் மற்றும் இதை நீங்கள் நோ கோஸ்ட்  EMI வசதியும் இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் உங்களுக்கு ஸ்கிறீன் ப்ரொடக்டரும்  கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo