பாப்-அப்- செல்பி கேமரா கொண்ட REALME X இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

பாப்-அப்- செல்பி கேமரா கொண்ட  REALME X  இன்று  பிளிப்கார்ட்டில்  விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி நிறுவனத்தின் Realme X  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு Realme X ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில்  விற்பனைக்கு  வருகிறது ஏற்கனவே  இது இரண்டு முறை ஒரே நாளில் விற்பனை வந்த பிறகு இதன் மவுசு இன்னும் குறைய வில்லை அதனை தொடர்ந்து இன்று மீண்டும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

விலை மற்றும் விற்பனை 
Realme X  ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளு மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜி.பி. ரேம் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பன ஜூலை 31 ஆம் தேதி ஆனா இன்று பகல் 12 மணிக்கு  மீண்டும்  Realme X ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது. விற்பனைக்கு வருகிறது.

Realme X சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– டூயல் சிம்
– கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3765 Mah  பேட்டரி
– VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்.

புதிய Realme X  ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo