Realme யின் அடுத்து வர இருக்கும் 64MP குவாட் கேமரா போன் விவரம் வெளியீடு.

Updated on 09-Aug-2019
HIGHLIGHTS

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம் செய்வதாகவும் அறிவித்தது. இதன் பொருள் அக்டோபர் 27 க்கு முன்பு நிறுவனம் போனை அறிமுகப்படுத்தலாம் .

சியோமி சமீபத்தில் 64 மெகாபிக்சல் கேமரா போனை பற்றி பேசியதுடன், அது தொடர்பான ஒரு நிகழ்வை புதுதில்லியில் வியாழக்கிழமை நடத்தியது. இந்த நிகழ்வில், ரியல்மீ சீரிஸ், ரியல்மீ ப்ரோ சீரிஸ் மற்றும் ரியல்மீ எக்ஸ் சீரிஸின் கீழ் குவாட் கேமரா போன்களை அறிமுகப்படுத்தப்போவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மீ தனது முதல் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம் செய்வதாகவும் அறிவித்தது. இதன் பொருள் அக்டோபர் 27 க்கு முன்பு நிறுவனம் போனை அறிமுகப்படுத்தலாம் .

அந்த வகையில் ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் ப்ரோ போன்ற மாடல்கள் புதிய வகை கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் கேமரா அமைப்பில் சூப்பர் வைடு ஆங்கில், அல்ட்ரா மேக்ரோ, டெலிபோட்டோ லென்ஸ், எக்ஸ்பர்ட் மோட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.

ஏற்கனவே விற்பனையாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்களில் நைட் ஸ்கேப் மற்றும் குரோம் பூஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 64 எம்.பி. போனில் 1/72″ 0.8-மைக்ரோமீட்டர் (μm) பிக்சல் 64எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது.

இதற்கென ரியல்மி பிராண்டு சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தது. இதுதவிர ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 64 எம்.பி. கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு எது சிறப்பாக இருக்கிறது என்பதையும் பதிவிட்டிருக்கிறது.

இத்துடன் புதிய கேமரா சென்சாரில் ரியல்-டைம் HDR மற்றும் அதிகபட்சம் 100 டெசிபல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி முன்னதாக 64 எம்.பி. கேமரா போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதன் 64 எம்.பி. பிக்சல் மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு புகைப்படங்கள் 64 எம்.பி. தரத்தில் வழங்கும்.

புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :