10,000mAh பிரமிபுட்டும் பேட்டரியுடன் Realme யின் கான்செப்ட் போன் ரிலிஷுக்கு தயார் எப்போ தெரியுமா

Updated on 07-May-2025

Realme அதன் புதிய கான்செப்ட் போனை கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த போனில் பேட்டரி மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது, நிறுவனம் Realme GT கான்செப்ட் போனில் 10,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது, இது பொதுவாக பவர் பேங்குகள் அல்லது சில டேப்லெட்களில் காணப்படுகிறது. சிறப்பு என்னவென்றால், இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தபோதிலும், தொலைபேசியின் தடிமன் 8.5 மிமீ மட்டுமே, மேலும் அதன் எடையும் 200 கிராமுக்கு குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

realme GT7 இந்திய அறிமுகம் தகவல்

realme GT7 சீரிஸ் இந்தியாவில் மே மாதம் அறிமுகமாகும், இருப்பினும் இந்த போனின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இல்லை, நிறுவனம் அடுத்த சில நாட்களில் இந்தியாவில் realme GT7 ஐ அறிமுகப்படுத்தும். GT7 தொடரின் தயாரிப்புப் பக்கம் ஷாப்பிங் தளமான Amazon-லும் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் பொருள் புதிய Realme 5G போனின் விற்பனை இந்த தளத்தில் நடைபெறும்.

10,000mAh பேட்டரி இருக்கும்

ரியல்மி இன்று தனது 10,000 mAh பேட்டரி மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது GT 7 சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்படும் ஒரு கான்செப்ட் போனாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு ட்ரேன்ஸ்பரென்ட் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும், இதன் பின்புற பேனல் வழியாக மொபைலில் உள்ள பேட்டரி தெரியும். இந்த போனில் ரியல்மி சிலிக்கான் அனோட் பேட்டரியைப் பயன்படுத்தியுள்ளது .

இந்த போனுக்கு ரியல்மி மற்றும் கிராஃப்டன் இடையே ஒரு கூட்டு உள்ளது, இந்த போனை டெஸ்டிங் செய்யும்போது போது, ​​கிராஃப்டன், realme GT7 யில் 6 மணிநேரம் வரை நிலையான 120fps கேமிங்கை அடைய முடியும் என்று கூறியுள்ளது, இது மொபைல் கேமிங்கிற்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கும். அதாவது Realme GT7 ஒரு கேமிங் போனாக இருக்கும், இது சக்திவாய்ந்த ப்ரோசெசர் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கேமிங் தொழில்நுட்பத்துடன் வரும்.

இவ்வளவு பெரிய பேட்டரியை பாஸ்ட் சார்ஜ் செய்ய, நிறுவனம் 320W பச்சத் சார்ஜிங்கையும் பயன்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை Realme ஏற்கனவே Realme GT 3 போனில் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:Lava Yuva Star 2 புதிய போன் வெறும் ரூ,6499 யில் அறிமுகம் இதன் அம்சங்கள் மற்றும் தகவலை பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :