Realme Q-Series ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 அறிமுகமாகும்.

HIGHLIGHTS

Realme Q சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகும்

RMX2173 மற்றும் RMX2117 எனும் மாடல் நம்பர்கள் கொண்ட இரு ரியல்மி ஸ்மார்ட்போன் TENAA வலைதளத்தில் சான்று பெற்று இருந்தன

Realme Q-Series ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 அறிமுகமாகும்.

ரியல்மி யுஐ 2.0 கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என ரியல்மி துணை  தலைவர் தெரிவித்து இருந்தார். மேலும் ரியல்மி கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் Q சீரிஸ் பிராண்டிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக RMX2173 மற்றும் RMX2117 எனும் மாடல் நம்பர்கள் கொண்ட இரு ரியல்மி ஸ்மார்ட்போன் TENAA வலைதளத்தில் சான்று பெற்று இருந்தன. இதில் RMX2176 சிறப்பம்சங்கள் ரியல்மி எக்ஸ்7  மாடலில் இருந்ததை போன்றே கொண்டிருக்கிறது.

இதனால் RMX2176 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்7 லைட் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் கேமரா மட்டும் வேறுபடும் என தெரிகிறது. RMX2173 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ சீரிசில் வெளியாகும் என கூறப்படுகிறது.

முன்னதாக 2019 ஆண்டில் ரியல்மி கியூ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, பின் அது ரியல்மி 5 ப்ரோ என ரி-பிராண்டு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய கியூ சீரிஸ் மாடல் ரியல்மி கியூ2 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile