8000Mah பேட்டரியுடன் பக்காவாக Realme யின் புதிய போன் அறிமுகம் இதில் இருக்கும் சுவாரசியம் என்ன
Realme இன்று அதன் புதிய Realme P4s 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது
இந்த போனில் மிக சிறந்த பர்போமான்ஸுக்கு MediaTek Dimensity 7400 Ultra 5G வளம்ன்கப்படுகிறது
இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme இன்று அதன் புதிய Realme P4s 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது இந்த போனில் மிக சிறந்த பர்போமான்ஸுக்கு MediaTek Dimensity 7400 Ultra 5G மற்றும் இந்த போனில் HyperVision+AI சிப் வழங்கப்படுகிறது, மேலும் இது கேமிங் பர்போமன்சுக்கு இது மிக சிறப்பான போனாக இருக்கும். இதனுடன் இந்த போனில் 8000Mah பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme P4s 5G விலை தகவல்.
இந்தியாவில் Realme P4s 5G-யின் விலை , 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 34,999-இல் தொடங்குகிறது. அதே சமயம், ஹை ரக 8GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 37,999 ஆகும். இறுதியாக, 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலை ரூ. 41,999 ஆகும். HDFC பேங்க் , ICICI பேங்க் மற்றும் SBI கார்டுகளுடன் நிறுவனம் ரூ. 3,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.
புதிய கைபேசியானது, செப்டம்பர் 3 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. Realme P4s 5G ஆனது Electric Cyan மற்றும் Titanium Grey ஆகிய கலர்களில் தேர்வுகளில் வாங்குவதற்குக் கிடைக்கும்.
Realme P4s 5G சிறப்பம்சம்.
Realme P4s போனில் 6.78-இன்ச் 1.5K (1,272 x 2,772 பிக்சல்கள்) சாம்சங் எம்14 அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 450 ppi பிக்சல் டென்சிட்டி , 3,000Hz உடனடி டச் சாம்பிளிங் ரேட், HDR10+ மற்றும் 6,500 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் பிரகாசம் ஆகியவற்றை வழங்குகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இந்த கைபேசி IP66 + IP68 + IP69 சர்டிபிகேஷன் உடன் வருவதாக அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது.

புதிய Realme P4s 5G ஸ்மார்ட்போனில், ஆக்டா-கோர் MediaTek Dimensity 7400 Ultra 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 2.6GHz ஹை கிளாக் ஸ்பீடை வழங்குவதோடு, ஸ்டோரேஜிற்காக HyperVision+ AI சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரையிலான LPDDR4x ரேம் உள்ளது, இதை 14GB வரை அதிகரிக்க முடியும். மேலும், 256GB வரையிலான UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் அடங்கும். , இந்த ஸ்மார்ட்போனில் ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,000 சதுர மிமீ வெப்ப வெளியேற்றப் பகுதியையும், 13,624 சதுர மிமீ கிராஃபைட் பகுதியையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 7.0 உடன் வரும் ஒரு டூயல்-சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருட ஓஎஸ் மேம்படுத்தல்களையும், நான்கு வருட பாதுகாப்பு அப்டேட் வழங்குவதாக அந்நிறுவனம் உறுதியளிக்கிறது
கேமராக்களைப் பொறுத்தவரை, ரியல்மி பி4எஸ் 5ஜி இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், இரு-அச்சு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 77.9 டிகிரி வியூவ் எங்கிளுடன் கூடிய 50 மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமராவும், 112 டிகிரி பார்வைக்கோணத்துடன் கூடிய 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 16 மெகாபிக்சல் (f/2.4) கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த போனில் 4K/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்யும் பவர் கொண்டுள்ளது.
இதையும் படிங்க புது போன் அறிமுகம் செய்யும் குஷியில் Realme P4s 5G யில் அதிரடி விலை குறைப்பு கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
இப்பொழுது Realme P4s 5G போனில் மிக சிறந்த பேட்டரி பெக்கபுக்கு 8000Mah பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது இது 28.5 நிமிடங்களில் முழுசாக 75% சார்ஜ் ஆகிவிடுகிறது இதனுடன் இந்த போனில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.4, a USB Type-C port, Beidou, GPS, GLONASS, Galileo, மற்றும் QZSS வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
