Realme இன்று அதன் Realme Narzo Power 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போனில் மிக பெரிய 10,001mAh பேட்டரியுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் MediaTek Dimensity 7400 ப்ரோசெசர் HyperVision+ AI சிப்செட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme Narzo Power 5G ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 27,999. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 29,999. இது டைட்டன் சில்வர் மற்றும் டைட்டன் ப்ளூ கலர்களில் வாங்கலாம் .
அறிமுக சலுகையாக, ரியல்மி நர்சோ பவர் 5G-யின் அடிப்படை மாறுபாட்டை ரூ.23,999 தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது, இதில் ரூ.3,000 பேங்க் சலுகை மற்றும் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியும் அடங்கும். டாப்-எண்ட் மாடல் ரூ.25,999க்கு கிடைக்கும். இந்த போனின் விற்பனை மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் ரியல்மியின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் தொடங்கும்.
அறிமுக சலுகையாக, நிறுவனம் ஆறு மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI விருப்பங்களை வழங்குகிறது. ஆரம்ப வாங்குபவர்கள் ரூ. 2,999 மதிப்புள்ள நான்கு வருட பேட்டரி வாராண்டி பெறலாம்.
Realme Narzo Power 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் (1,280×2,800 பிக்சல்) ரெசளுசன் 144Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது 94% பாடி ரேசியோ உடன் 6500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது
இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில், MediaTek Dimensity 7400 Ultra 5G சிப்செட்டுடன் இது Android 16-அடிபடையின் கீழ் realme UI 7.0 யில் வேலை செய்கிறது, இதனுடன் இந்த போனில் Arm Mali-G615 GPU, உடன் 8GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS3.1 வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
பின்புறத்தில், ரியல்மி நார்சோ பவர் 5G ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அலகு உள்ளது, இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX882 சென்சார் ஆட்டோஃபோகஸ் மற்றும் 2-ஆக்சிஸ் OIS சப்போர்டுடன் மற்றும் 8 மெகாபிக்சல் செகண்டரி கேமராவும் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்காக 16 மெகாபிக்சல் முன் பேஸிங் கேமரா உள்ளது.
இதையும் படிங்க:கம்மி விலையில் தூக்க சரியான நேரம் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
Realme Narzo Power 5G ஸ்மார்ட்போனின் தனித்துவமான அம்சம் அதன் பேட்டரி ஆகும், மேலும் இது 10,001mAh லித்தியம்-அயன் பாலிமர் செல்லைப் பயன்படுத்துகிறது. இந்த பேட்டரி குறைந்தபட்சம் 1,500 சார்ஜ் ரீச்சர்ஜில் சப்போர்ட் செய்கிறது , மேலும் இது SUPERVOOC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
மேலும், ரியல்மி நார்சோ பவர் 5G ஆனது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்க்களை கொண்டுள்ளது. இந்த தொலைபேசி ஹை-ரெஸ் ஆடியோ சர்டிபிகேட் மற்றும் மிலிட்டரி -கிரேடு அதிர்ச்சி ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.