5 கேமரா மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் Realme Narzo 20 Pro இன்று முதல் விற்பனை.

HIGHLIGHTS

Realme Narzo 20 Pro வின் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் நடைபெறும்.

Narzo 20 Pro யின் விலை Rs 14,999 ஆகும்

Narzo 10 pro 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆகும்

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. நார்சோ 20 ப்ரோ தற்போது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆகும்.  Realme Narzo 20 Pro வின் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் நடைபெறும்.

விலை மற்றும் விற்பனை தகவல்

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட் நைட் மற்றும் பிளாக் நின்ஜா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், உங்களுக்கு 1 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், HSBC கிரெடிட் கார்டு மூலம் ரூ .1500 வரை தள்ளுபடி பெறலாம்.

கவர்ச்சிகரமான EMI சலுகையின் கீழ் இந்த போனையும் வாங்கலாம். ஈ.எம்.ஐ மாதத்திற்கு ரூ .1,667 தொடங்குகிறது. இந்த போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் வாங்கி கொண்டால் ரூ .14,250 வரை வாங்கி நன்மை பெறலாம். .

REALME NARZO 20 PRO சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
 – ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
– மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு
– 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி
– 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறத

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :