realme launching Realme GT7 in India
Realme கடந்த வாரம் சீனா சந்ததியில் அதன் realme GT7 அறிமுகம் செய்தது, மேலும் இது கேமிங் செக்மண்டில் மிக சிறப்பாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து இப்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்வதாக உருதி செய்துள்ளது. மேலும் realme GT7 5G போனை பற்றி டீஸ் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
நிறுவனம் realme GT7 5G மே மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது, ஆனால் இன்னும் இதன் தேதி தகவலை பற்றி குறிப்பிடவில்லை மேலும் இதை பற்றி இ-காமர்ஸ் தளமான அமேசானில் டீஸ் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் மூலம் இந்த போனை அமேசானில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது இதை தவிர இந்த போன் realme உடன் Krafton கூட்டு இருப்பதால் இது Realme இந்த போனில் முதல் முறையாக 120 FPS இருப்பதால் சுமார் 6 மணி நேரம் கேமிங் விளையாட முடியும். மேலும் இதன் அறிமுகம் தேதிக்கு விரைவில் அப்டேட் செய்யப்படும்
டிஸ்ப்ளே
Realme GT7 5G போனில் 6.78-இன்ச் 1.5K OLED ஸ்க்ரீன் 2800 × 1280 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. இது 144Hz ரெப்ரஸ் ரேட் 6500nits ஹை ப்ரைட்னாஸ் வழங்கும்
பர்போமான்ஸ்
Realme GT 7 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது MediaTek இன் 3nanometer Dimensity 9400 Plus ஆக்டா-கோர் ப்ரோசெசர் கட்டமைக்கப்பட்டது, இது 3.73GHz வரை கிளாக் ஸ்பீடில் இயங்கும் பவர் கொண்டது.
கேமரா
போட்டோ எடுப்பதற்காக, இந்த Realme மொபைல் போன் இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்புற பேனலில் 50 மெகாபிக்சல் ப்ரைம் சென்சார் பொருத்தப்பட்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு , இது 16 மெகாபிக்சல் சோனி IMX480 சென்சார் கொண்டுள்ளது.
பேட்டரி
பவர் பேக்கப்பிற்காக, Realme GT 7 சக்திவாய்ந்த 7,200 mAh டைட்டன் பேட்டரியை சப்போர்ட் செய்கிறது. இந்த பெரிய பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய, ஸ்மார்ட்போனில் 100W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.
மேலும் இந்த அம்சங்கள் அனைத்தும் சீனா ஸ்மார்ட்போன் படி இருக்கிறதும் மேலும் இந்த போன் அதே அம்சங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது மேலும் இதன் அறிமுகத்திற்க்கு பிறகு இதன் தெளிவான தகவல் பார்க்கலாம்.
இதையும் படிங்க:Dimensity 6300 சிப் உடன் Realme 14T அறிமுகம், டாப் அம்சங்கள் பற்றி பாருங்க