Realme GT 6T இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Updated on 22-May-2024
HIGHLIGHTS

Realme GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது

இதில் 4nm Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

Realme GT 6T யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 30,999ரூபாயில் ஆரம்பமாகிறது

Realme GT 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது,. இது நாட்டில் வந்த முதல் போன் ஆகும், இதில் 4nm Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது Realme GT 6T Soc வைக்கப்பட்டுள்ளது GT 6டி 12 ஜிபி ரேம் கொண்டது. உள் ஸ்டோரேஜ் 512 ஜிபி வரை உள்ளது. டூயல் ரியர் கேமரா (Realme GT 6T Camera) போனில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய கேமரா 50 மெகாபிக்சல்கள், இது சோனியின் LYT-600 சென்சார் ஆகும். Realme GT 6T இல் 5,500mAh பேட்டரியை வழங்கியுள்ளதாக Realme கூறுகிறது, இது 120W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Realme GT 6T இந்தியாவில் விலை தகவல்

Realme GT 6T யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 30,999ரூபாயில் ஆரம்பமாகிறது, இந்த போனின் 8GB+256GB மற்றும் 12GB+256GB ஒப்சனின் விலை ரூ.32,999 மற்றும் ரூ.35,999. இதன் டாப் வேரியண்ட் விலை ரூ.39,999. ரூபாயாக இருக்கிறது

Realme GT 6T ஃப்ளூயிட் சில்வர் மற்றும் ரஜோர் கிரீன் கலர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 29 அன்று பகல் 12 மணிக்கு Amazon மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு வரும் ICICI, HDFC மற்றும் SBI கார்ட் பயனர்களுக்கு 4 ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட் பெறலாம், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இது போனின் விலையை ரூ.6,000 குறைக்கிறது.

#Realme GT 6T இந்தியாவில் விலை தகவல்

Realme GT 6T டாப் அம்சம்

டிஸ்ப்ளே

Realme GT 6Tயில் 6.78 இன்ச் கொண்ட முழு HD + (1,264×2,780)பிக்சல் LTPO AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது இதன் ரெப்ராஸ் ரேட் விகிதம் 1Hz முதல் 120Hz வரை இருக்கும். உச்ச 1,000 நிட்கள். ஃபோன் 6 ஆயிரம் நிட்கள் வரை இருக்கும் இது ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது என்று Realme கூறுகிறது.

ப்ரோசெசர்

இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Realme GT 6T யில் 4nm Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் இருக்கிறது இந்தியாவில் முதல் முறையாக இந்த ப்ரோசெசர் உடன் வருகிறது இதை தவிர இதில் 12GB வரையிலான LPDDR5X RAM மற்றும் 512GB வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

# Realme GT 6T டாப் அம்சம்

ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Realme GT 6T ஃபோன் Android 14 OS யில் இயங்குகிறது. அதில் Realme UI 5 லேயர் உள்ளது. இந்த போனில் 3 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேடுகள் வழங்கப்படும் என்றும், 4 ஆண்டுகளுக்கு செக்யுரிடிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கேமரா

Realme GT 6T ஆனது 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது, இது Sony LYT-600 சென்சார் ஆகும். இது ஆப்டிகல் இமேஜ் உறுதிப்படுத்தலை சப்போர்ட் செய்கிறது இது தவிர, இது 8 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்கு, 32 மெகாபிக்சல் சோனி IMX615 சென்சார் Realme GT 6T யில் கிடைக்கிறது.

Realme GT 6T

பேட்டரி

இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் இதில் 5,500mAh பேட்டரி உடன் 120W சுப்பர்வூப் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது

கனெக்டிவிட்டி

இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், Realme GT 6T யில் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type-C போர்ட் வசதியுடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வரும் Realme GT 6Tயின் எடை 191 கிராம். ஆகும்.

இதையும் படிங்க : Vivo யின் அசத்தலான போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :