Poco M2 ஸ்மார்ட்போன் இன்று படஜெட் விலையில் அறிமுகம்.

Updated on 08-Sep-2020
HIGHLIGHTS

Poco M2 ஸ்மார்ட்போனில் 5000 Mah பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய Poco M2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி ஆன இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய Poco M2ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்

Poco M2 ஸ்மார்ட்போனில் 5000 Mah பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தகவல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி ஆன இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. போக்கோ எம்2 விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Poco M2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய Poco M2  மாடல் வாட்டர்டிராப் நாட்ச், பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்தது. முந்தைய போக்கோ எம்2 ப்ரோ மாடலில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.

முந்தைய போக்கோ எம்2 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 13999 முதல் துவங்குகிறது. இதனால் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :