Poco பிராண்டு தனது புதிய M2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
புதிய Poco ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பார்க்க ரெட்மி நோட் 9 ப்ரோ சர்வதேச மாடல் போன்று தெரிகிறது. போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பருடன் சியோமி வலைதளத்தில் வெளியாகி இருந்தது.
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என போக்கோ பிராண்டு தெரிவித்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் வெவ்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் அதிக ரிஃப்ரெஷ் ரேட் எல்சிடி ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது