அறிமுகத்திற்க்கு முன்பே Poco F4 5G ஸ்மார்ட்போன் விலை தகவல் லீக்

HIGHLIGHTS

Poco F4 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்,

நிறுவனம் அதன் வரவிருக்கும் கைபேசியின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது

போக்கோ F4 5ஜி வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அறிமுகத்திற்க்கு முன்பே Poco F4 5G ஸ்மார்ட்போன் விலை தகவல் லீக்

Poco F4 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும், ஆனால் வெளியீட்டிற்கு முன், நிறுவனம் அதன் வரவிருக்கும் கைபேசியின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது போனின் விலை ஒரு அறிக்கையிலிருந்து கசிந்துள்ளது, உங்கள் தகவலுக்காக, அங்கீகரிக்கப்பட்ட Xiaomi சில்லறை விற்பனையாளரால் தொலைபேசியின் விலை லீக் ஆகியுள்ளது போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை லீக் மூலம் தெரியவந்துள்ளது. போக்கோ F4 5ஜி வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இதன் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Poco F4 5G ஸ்மார்ட்போன்  சிறப்பம்சம் 

அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிபிசெட் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிபிசெட் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அதன் படி போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் 12GB LPDDR5 ரேம், 256GB UFS3.1 மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம். இந்த பிரிவில் கிடைக்கும் அதிவேக ஸ்மார்ட்போன் மாடலாக போக்கோ F4 5ஜி இருக்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் போக்கோ F4 ஒற்றை வேரியண்டில் அறிமுகமாக இருக்கிறது.

Poco F4 5G Price (லீக் )

Poco F4 5G இன் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை $459 (தோராயமாக ரூ. 35,900) என RouteMyGalaxy இன் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஃபோனில் 12 ஜிபி ரேம் மாறுபாடு இருக்கும் என்பதை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது, எனவே 12 ஜிபி மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

இந்தியாவில் இந்த Foco மொபைல் போனின் விலை சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த போன் சுமார் 27 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் வங்கி சலுகைகளுக்குப் பிறகு இந்த போனை இன்னும் மலிவாக வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது. சலுகைக்குப் பிறகு, இந்த சாதனத்தை நீங்கள் ரூ. 23,999 க்கு வாங்க முடியும் என்றும் இந்த விலையில் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் கொண்ட மலிவான போனாக மாறும் என்றும் கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile