ஐபோன் X தோற்றத்தில் ஒப்போ F 7 இந்தியாவில் வெளியானது

ஐபோன் X தோற்றத்தில் ஒப்போ F 7 இந்தியாவில் வெளியானது
HIGHLIGHTS

ஒப்போ நிறுவனத்தின் புதிய F 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எஃப் 7 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று எஃப் 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. oppo  F  7 ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. நாட்ச் மற்றும் 88% ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருப்பதால் இந்த டிஸ்ப்ளேவினை ஒப்போ சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே என அழைக்கிறது. 

ஒப்போ ஸ்மார்ட்போன்களில் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக வடிவமைக்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 25 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) சென்சார், செயற்கை நுண்ணறிவு பியூட்டி 2.0 அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20% மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை நினைவில் கொண்டு, புகைப்படங்களை இயற்கையாகவே அழகாக்கும். இத்துடன் செல்ஃபிக்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டுகிறது.

ஒப்போ எஃப் 7 சிறப்பம்சங்கள்:

– 6.23 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 IPS டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
– ARM மாலி-G72 MP3 GPU
– 4 ஜிபி, 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, HDR,  சோனி IMX576 சென்சார்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி

Oppo F  7 ஸ்மார்ட்போன் சோலார் ரெட், மூன்லைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட சன்ரைஸ் ரெட் நிறத்தில் ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் ரூ.26,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo