ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த ஒப்போ நிறுவனம் பாலிவுட் நடிகர் வருன் தவானை நியமித்து உள்ளது.
புதிய ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் ஏஐ ஹைலைட் போர்டிரெயிட் வீடியோ அம்சம் கொண்டுள்ளது. இது குறைந்த வெளிச்சம் கொண்ட வீடியோ எடுக்கப்படும் போதும் சீரான காட்சிகளை வெளிப்படுத்தும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.
புதிய எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஒப்போ ஸ்மார்ட் 5ஜி 3.0 வசதி கொண்ட முதல் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை பெற வழி செய்கிறது. மேலும் இதில் எட்டு ஆன்டெனாக்கள் 360 கோணங்களில் பொருத்தப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் எந்த நிலையில் இருந்தாலும் சீரான 4ஜி மற்றும் 5ஜி டேட்டா அனுபவத்தை வழங்கும்.
ஒப்போ எஃப் 19 ப்ரோ 6.4 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும். போனில் மீடியாடெக் ஹீலியோ பி 95 செயலி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு இருக்கும். ஒப்போவின் இந்த போனில் , 4310 எம்ஏஎச் பேட்டரி 30 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யப்படும்.
இந்த சாதனம் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும். இது தவிர, போனில் 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட், 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் இருக்கும். எஃப் 19 ப்ரோ செல்பிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டிருக்கும்