ஒப்போவின் பட்ஜெட் போனான Oppo A17 அறிமுகமானது.

Updated on 28-Sep-2022
HIGHLIGHTS

OPPO தனது புதிய ஸ்மார்ட்போன் Oppo A17 அறிமுகப்படுத்தியுள்ளது

OPPO A17 என்பது 50 -மெகாபிக்சல் கேமரா கொண்ட பட்ஜெட் போன்

OPPO A17 உடன் மீடியாடெக் ஹீலியோ Helio P35 ப்ரோசிஸோர் வழங்கப்பட்டுள்ளது.

OPPO தனது புதிய ஸ்மார்ட்போன் Oppo A17 அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO A17 என்பது 50 -மெகாபிக்சல் கேமரா கொண்ட பட்ஜெட் போன். OPPO A17 தற்போது மலேசியாவில் தொடங்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் தொடங்கப்பட்டதைப் பற்றி எந்த தகவலும் இல்லை. OPPO A17 உடன் மீடியாடெக் ஹீலியோ Helio P35 ப்ரோசிஸோர் வழங்கப்பட்டுள்ளது.

Oppo A17 யின் விலை

Oppo A17 இன் விலை 599 மலேசியன் ரிங்கிட் அதாவது சுமார் 10,600 ரூபாய். இந்த விலை 4 ஜிபி ரேம் கொண்ட 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையாகும். Oppo A17 லேக் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் கலரில் வாங்கலாம். 

Oppo A17 யின் ஸ்பெசிபிகேஷன்

Oppo A17 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS 12.1.1 உடன் டூவல் சிம் சப்போர்ட் உடன் உள்ளது. Oppo A17 ஆனது MediaTek Helio P35 ப்ரோசிஸோர் மற்றும் 4 GB RAM உடன் 64 GB ஸ்டோரேஜ் 6.56 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Oppo A17 யின் கேமரா

இந்த Oppo போனில் டூவல் பின்புற கேமரா செட்அப் உள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள், இது அப்ச்சர் f/1.8 உள்ளது. இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் முன்பக்கம் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 

Oppo A17 யின் பேட்டரி

இந்த Oppo போனில் 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ USB போர்ட் இணைப்பு உள்ளது. Oppo A17 ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 189 கிராம் எடை கொண்டது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :