OnePlus Nord CE 6 5G
OnePlus இந்தியாவில் சத்தமில்லாமல் அதன் புதிய OnePlus Nord CE 6 5G போனை அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனை மிட் ரேன்ஜ் பிரிவில் கொண்டு வரப்பட்டது. இந்த போனில் 8000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 6.78 இன்சின் 1.5K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
OnePlus Nord CE 6 5G போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது
– 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் = ரூ, 29,999
– 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் = ரூ,32,999
மேலும் இந்த போனை அதில் Fresh Blue, Lunar Pearl, மற்றும் Pitch Black.கலரில் வாங்கலாம், ஒன்பிளஸ் ஸ்டோர், மே 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் , அமேசான் தளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைளர் விற்பனைப் கடைகளில் கிடைக்கும். அறிமுகச் சலுகைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளைக் கொண்டு முழுமையாக ஸ்வைப் செய்யும்போது ரூ,1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் , EMI ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்கு ரூ,2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் அடங்கும். மேலும், ஆறு மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI வசதியும் கிடைக்கும்.
இதையும் படிங்க:நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த விவோவின் Vivo X300 Ultra மற்றும் X300 FE பிரமிக்க வைக்கும் விலையில் அறிமுகம்
OnePlus Nord CE 6 5G , 144Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்டுடன் கூடிய 6.78-இன்ச் AMOLED கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் அக்வா டச் 2.0 மற்றும் 3840Hz-ல் PWM டிம்மிங் ஆகியவற்றுக்கான சப்போர்ட் உள்ளது. இதன் ஸ்பீக்கர்கள் 300% அல்ட்ரா வால்யூமை சப்போர்ட் செய்கிறது. இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ஒன்பிளஸ் 15 சீரிஸிலும் உள்ள பிரத்யேக டச் ரிஃப்ளெக்ஸ் சிப் இதில் உள்ளது.ந்தச் போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 16 முன்பே நிறுவப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் CE 6 5G ஆறு ஆண்டுகளுக்கு பாஸ்ட் மற்றும் மென்மையான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும்.
OnePlus Nord CE 6 5G டூயல்-ஆக்சிஸ் OS உடன் கூடிய 50MP ப்ரைம் கேமராவையும், செல்ஃபிகளுக்காக முன்பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட 32MP சென்சாரையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் CE 6 5G, 80W ஃபாஸ்ட்-சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
மேலும், இந்தச் போனில் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய IP ரெட்டின்குடன் வரும். இதன் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்கட்ஸ்+ மூலம் பாதுகாக்கப்படுகிறது.