OnePlus யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.13,649 யில் வாங்கலாம்

Updated on 17-Feb-2025

Amazon இந்த OnePlus Nord CE 3 Lite 5G போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ரூ.15,000 பட்ஜெட்டில் புதிய போனை வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காலகட்டத்தில், விலைக் குறைப்புகளைத் தவிர, பேங்க் சலுகைகளும் பெரும் சேமிப்பு செய்யலாம், இதை தவிர இந்த போனை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord CE 3 Lite 5G விலை & சலுகைகள்

OnePlus Nord CE 3 Lite 5G இன் 18GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இ-காமர்ஸ் தளத்தில் ரூ.15,649க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையைப் பற்றிப் பேசுகையில், ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ரூ.2,000 ஸ்டேண்டர்டு தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.13,649 ஆக இருக்கும். இது தவிர, உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையாக வழங்குவதன் மூலம் ரூ.12,650 சேமிக்கலாம். இருப்பினும், பரிமாற்றச் சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ஸ்சேஞ்சில் வழங்கப்படும் அனால் இந்த போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.

OnePlus Nord CE 3 Lite 5G

OnePlus Nord CE 3 Lite 5G சிறப்பம்சம்

OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 1080×2400 பிக்சல்கள் ரெஸலுசன் , 20:9 பாடி ரேஷியோ மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது.

.கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Nord CE 3 Lite 5G இன் பின்புறம் 108-மெகாபிக்சல் முதல் கேமரா, 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 67W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, Wi-Fi, Bluetooth 5.3, USB Type-C port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:iQOO பிரியர்களுக்கு சந்தொஷமான செய்தி இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :