OnePlus Nord CE 3 Lite 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, ஆபர் பற்றி தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

OnePlus நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் நடுத்தர அளவிலான OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது

OnePlus Nord CE 3 Lite 5G இரண்டு வகைகளில் வருகிறது

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட்/டெபிட் இஎம்ஐ ஆகியவற்றிலும் உடனடி தள்ளுபடி ரூ.1000 கிடைக்கும்.

OnePlus Nord CE 3 Lite 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, ஆபர் பற்றி தெரிஞ்சிக்கோங்க.

OnePlus நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் நடுத்தர அளவிலான OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது மற்றும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. சாதனத்தின் விற்பனை Amazon மற்றும் OnePlus யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில்  தொடங்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Nord CE 3 Lite 5G விலை தகவல்.

OnePlus Nord CE 3 Lite 5G இரண்டு வகைகளில் வருகிறது. அடிப்படை மாறுபாட்டின் (8ஜிபி+128ஜிபி) விலை ரூ.19,999 மற்றும் டாப் வேரியண்ட் (8ஜிபி+256ஜிபி) ரூ.21,999. இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Nord CE 3 Lite 5G ஆபர்.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட்/டெபிட் இஎம்ஐ ஆகியவற்றிலும் உடனடி தள்ளுபடி ரூ.1000 கிடைக்கும்.

OnePlus.in, Amazon.in மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் இருந்து Nord CE 3 Lite 5G வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு OnePlus Nord Buds CE TWSஐயும் இலவசமாக வழங்குகிறது.

ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு Spotify பிரீமியத்திற்கான அணுகலை நிறுவனம் வழங்குகிறது.

OnePlus Nord CE 3 Lite 5G சிறப்பம்சம்.

புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 மூலம் இயங்கும் நார்ட் CE 3 லைட் 5ஜி இரண்டு மென்பொருள் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா உள்ளது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile