ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Survey
✅ Thank you for completing the survey!
அதன்படி ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,559 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இது ஒன்பிளஸ் 8 ஐரோப்பிய வெர்ஷனை விட 50 யூரோக்கள் வரை குறைவு ஆகும்.
புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்ட 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை அமேசானில் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒன்பிளஸ் 8டி மாடலில் 6.5 இன்ச் 120Hz FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி சென்சார், 5 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile