OnePlus 8 ப்ரோ சில லீக் பல சுவாரசியம் அடங்கியுள்ளது.

Updated on 30-Mar-2020

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஆண்டிற்கான ஸ்மார்ட்போன் மாடல்களை ஒன்பிளஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆன்லீக்ஸ் மற்றும் ஐகீக்ஸ் பிளாக் மூலம் வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் கேமரா டிஸ்ப்ளேவின் இடதுபுற ஓரத்தில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 மாடல்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் 8 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் கீழ்புறம் ஸ்பீக்கர் கிரில், பின்புறம் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இவை  ஒன்பிளஸ் 7 டி ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கிறது. நான்கில் மூன்று கேமராக்கள் செங்குத்தாகவும், மற்றொரு கேமரா தனியாகவும், அதன் கீழ் டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன் கீழ் சிம் டிரே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் மோனோ ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய  ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், IP86 வாட்டர் ப்ரூஃப் வசதி, 4510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் வையர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்

ஸ்மார்ட்போனின் பின்புறம் புதிய  ஒன்பிளஸ் லோகோ நடுப்புறத்தில் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்திலும் பிராண்டிங் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் அலெர்ட் ஸ்லைடர் மற்றும் வல்யூம் ராக்கர் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் காணப்படுகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :