OnePlus 11 யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் அறிமுக தேதி வெளியானது.

HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போன் ஒன்பிளஸ் 11 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.

OnePlus 11 ஃபோன் OnePlus 10 க்கு மேம்படுத்தப்பட்டதாக வழங்கப்படுகிறது. இந்த போன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி அறிமுகம் செய்யப்படும்.

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 செயலி மற்றும் மூன்று கேமரா அமைப்பு ஒன்பிளஸ் 11 உடன் கிடைக்கும்.

OnePlus 11 யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் அறிமுக தேதி வெளியானது.

ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போன் ஒன்பிளஸ் 11 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. OnePlus 11 ஃபோன் OnePlus 10 க்கு மேம்படுத்தப்பட்டதாக வழங்கப்படுகிறது. இந்த போன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி அறிமுகம் செய்யப்படும். நிறுவனம் சமீபத்தில் இந்த போனின் டீசரை வெளியிட்டது. இந்த போனுடன், நிறுவனம் OnePlus Buds Pro 2 இயர்பட்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 செயலி மற்றும் மூன்று கேமரா அமைப்பு ஒன்பிளஸ் 11 உடன் கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. தற்போதைய டீசர்களில் "விட்னஸ் தி ஷேப் ஆஃப் பவர்" எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புது ஸ்மார்ட்போனில் அலெர்ட் ஸ்லைடர் மீண்டும் கொண்டுவரப்படுவது அம்பலமாகி இருக்கிறது. இந்த அம்சம் ஒன்பிளஸ் 10T மாடலில் நீக்கப்பட்டு இருந்தது.

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் 2K அல்லது குவாட் HD+ ஸ்கிரீன், இடது புறத்தில் பன்ச் ஹோல், UFS 4.0 ஸ்டோரேஜ், மெட்டல் ஃபிரேம், 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், 45db வரை அடாப்டிவ் ANC வசதி, ஒவ்வொரு இயர்பட்களிலும் மூன்று மைக்ரோபோன்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் LHDC 4.0 கோடெக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த இயர்போன் ANC மோடில் ஆறு மணி நேரமும், ANC ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒன்பது மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் பிராண்டிங் கொண்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 டீசர் முந்தைய இயர்பட்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புது இயர்பட்ஸ் ஃபுல் பாடி, ஸ்டீரியோ தர ஆடியோ அனுபவம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர் கருத்துக்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile