Nothing Phone 1 வெளியிட்டு தேதி அறிவிவிப்பு அதற்க்கு முன் சிறப்பம்சம் லீக்.
புதிய நிறுவனமான நத்திங் தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது
நத்திங் ஃபோன் 1 அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது
நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது.
ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெயின் புதிய நிறுவனமான நத்திங் தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நத்திங் ஃபோன் 1 அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ ஆகியவற்றுடன் சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றின் ஸ்மார்ட்போன்களுடன் நத்திங் ஃபோன் 1 போட்டியிடாது.
Surveyநத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 இந்த ஆண்டின் கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என மார்ச் மாதம் வாக்கில் அறிவித்து இருந்தது. அப்போதே, புதிய நத்திங் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸரை மற்றும் நத்திங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது.
“144 மில்லியன் டாலர்களை முதலீடாக ஈட்டி இருக்கிறோம். 300-க்கும் அதிகமானோர் கொண்ட குழுவை உருவாக்கி இருக்கிறோம். குவால்காம் டெக்னாலஜீஸ் போன்ற நம்பத்தகுந்த நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். உறங்கி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் போன் 1 மாடலை அறிமுகம் செய்ய தயாராகி விட்டோம்,” என கார்ல் பெய் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், புதிய நத்திங் போன் 1 மாடலுக்கான வெளியீட்டு தேதியை கார்ல் பெய் அறிவித்து இருக்கிறார். நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜூன் 9 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு நத்திங் போன் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக நத்திங் நிறுவனம் நத்திங் லான்ச்சர் பீட்டா வெர்ஷனை உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிட்டு இருந்தது. நத்திங் லான்ச்சர் பீட்டா நத்திங் ஓ.எஸ். இண்டர்பேஸ் போன் 1 மாடலில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் லான்ச்சர் பீட்டாவில் பெரிய ஐகான்கள், போல்டர்கள், பிஸ்போக் கடிகாரம், வானிலை விட்ஜெட், நத்திங் தீம் கொண்ட வால்பேப்ர்கள், மூன்று ஒரிஜினல் ரிங்டோன்கள் இடம்பெற்றுள்ளன.
நத்திங் ஓ.எஸ். பீட்டா வெர்ஷன் சாம்சங் கேலக்ஸி S21, சாம்சங் கேலக்ஸி S22, கூகுள் பிக்சல் 5 மற்றும் உயர் ரக ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த லான்ச்சர் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
