Nothing Phone 1 யில் சார்ஜர் வராது தகவல் வெளியாகியது.

HIGHLIGHTS

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது.

ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள படத்தின் படி, நத்திங் ஃபோனின் (1) MRP ரூ.39,999 ஆக இருக்கும்

நத்திங் போன் (1) மாடலுக்கு சார்ஜர் வழங்கப்பட மாட்டது Nothing Phone 1 Could Ship Without an Included Charger

Nothing Phone 1 யில் சார்ஜர்  வராது தகவல் வெளியாகியது.

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிலையில், நத்திங் போன் பற்றிய மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நத்திங் போனின் ரீ-டெயில் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதன்மூலம் நத்திங் போன் (1) மாடலுக்கு சார்ஜர் வழங்கப்பட மாட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ரீ-டெயில் பாக்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள படத்தின் படி, நத்திங் ஃபோனின் (1) MRP ரூ.39,999 ஆக இருக்கும். ஆனால் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டிற்கான சாதனத்தின் விலை பிளிப்கார்ட்டில் ரூ.34,999 ஆக இருக்கலாம். சாதனத்தை பட்டியலில் வெள்ளை நிறத்தில் காணலாம்.

அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.

இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், 120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.55-இன்ச் OLED ஸ்க்ரீன் , ஒரு ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட், ஃபோனின் பின்புறத்தில் 50MP + 16MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 4,500mAh பேட்டரியுடன் 45W வயர்டு மற்றும் 45W வயர்லெஸ் ஆதரவு கொண்ட பேட்டரி ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile