நீண்ட நாட்களாக பல வதந்தி வந்து கொண்டே இருந்த நிலையில்,HMD குளோபல் நிறுவனம் நோக்கியா X71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது.
நீண்ட நாட்களாக பல வதந்தி வந்து கொண்டே இருந்த நிலையில்,HMD குளோபல் நிறுவனம் நோக்கியா X71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா X71 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க 16 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, 93 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. தாய்லாந்தில் இதன் விலை NT$ 11,990 (இந்திய மதிப்பில் ரூ.26,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் நோக்கியா 6.2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.