Nokia விரைவில் அதன் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்.

HIGHLIGHTS

நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது

நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும்

வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை,

Nokia விரைவில் அதன்  X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்.

நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவை 120HZ புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. புதிய X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும் நோக்கியா நிறுவனம் இதன் வெளியீட்டை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வந்தது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வந்த இந்த ஸ்மார்ட்போன் டஸ்க் மற்றும் நார்டிக் புளூ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா நிறுவனம் ஏப்ரல் 26-ந் தேதி புது ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. நோக்கியா ஜி-21 எனப்படும் அந்த மாடலின் விலை ரூ.12 ஆயிரத்து 999 மட்டுமே. இது 4ஜிபி ரேம் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வந்தது. அதேபோல் 6ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile