நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போனை அறிமுகப்படுத்த்க்த்தியுள்ளது

Updated on 24-Jul-2019

ஆண்ட்ராய்டு உலகத்தில் அறிமுகப்படுத்தியது நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105மொபைல் 

HMD . குளோபல் நிறுவனம் நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய நோக்கியா 105 நான்காவது முறையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.இதில் நோக்கியா 220 4ஜி மொபைல் போன் 2014 ஆம் ஆண்டு அறிமுகமான நோக்கியா 220 மாடலின் தற்பொழுது அப்டேட் செய்யப்பட்டுள்ள மாடல் ஆகும்.

நோக்கியா 220 4ஜி சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளே
– ஃபீச்சர் ஒ.எஸ்.
– 16 எம்.பி. ரேம்
– 24 எம்.பி. மெமரி
– வி.ஜி.ஏ. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
– எம்.பி.3 பிளேயர்
– GSM/GPRS 900/1800 (EU); LTE1 Cat-1, 10Mbps DL / 5Mbps UL
– 4ஜி மற்றும் 2ஜி
– ப்ளூடூத் 4.2, மைக்ரோ USB  
– 1200Mah . பேட்டரி

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 220 4ஜி மொபைலில் 2.4 இன்ச் QQVGA கலர் ஸ்கிரீன், பாலிகார்போனேட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, ஃபேஸ்புக், ட்விட்டர், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ மற்றும் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 105 (2019) சிறப்பம்சங்கள்:

– 1.77 இன்ச் 160×120 பிக்சல் QQVGA கலர் டிஸ்ப்ளே
– நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள்
– 4 எம்.பி. ரேம்
– 4 எம்.பி. ரோம்
– GSM 900/1800 (EU); 850/1900 (US)
– எஃப்.எம். பேடியோ
– டார்ச் லைட்
– சிங்கிள் / டூயல் சிம்
– மைக்ரோ யு.எஸ்.பி. 2.0
– 800 Mah பேட்டரி

நோக்கியா 105 மொபைல் போன் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 1.77 இன்ச் QQVGA கலர் ஸ்கிரீன், எல்.இ.டி. டார்ச் லைட்கள், இன்பில்ட் எஃப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும்  நிறங்கள் 
நோக்கியா 220 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 39 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 3000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 105 (2019) மாடல் புளு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 13 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 999) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :