64MP கேமரா கொண்ட Nokia 8.3 5G யின் விலை தகவல் வெளியானது.

HIGHLIGHTS

Nokia 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது

Nokia 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது

Nokia 8.3, 5G, 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 599 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,995

64MP கேமரா கொண்ட Nokia 8.3 5G யின் விலை தகவல் வெளியானது.

HMD குளோபல் தனது நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் சர்வதேச வெளியீடு துவங்கி உள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை தகவல் 

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 599 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,995 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 649 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 55,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0
– யுஎஸ்பி டைப்-சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் சார்ஜிங்
– ஆண்ட்ராய்டு 10

சிறப்பம்சங்களை பொருத்தவரை இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. 

ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile