சிறந்த டிசைன் மற்றும் 20MP செல்பி கேமராவுடன் NOKIA 7.2 இந்தியாவில் அறிமுகம்.

Updated on 19-Sep-2019
HIGHLIGHTS

ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா செய்ஸ் ஆப்டிக்ஸ், குவாட் பிக்சல் தொழில்நுட்பம், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன

HMD  குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் பியூர்டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது..

விலை மற்றும் விற்பனை 

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் சியான் கிரீன் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. / 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 18,599 என்றும் 6 ஜி.பி. / 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 19,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா வலைத்தளங்களில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வி்ற்பனை செய்யப்படுகிறது.

 NOKIA 7.2  சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ 19.5:9 HDR 10 பியூர் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, ZEISS ஆப்டிக்ஸ்
– 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்.பி. டெப்த் சென்சார்
– 20 எம்.பி. குவாட் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.0, ZEISS ஆப்டிக்ஸ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி 2.0
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா செய்ஸ் ஆப்டிக்ஸ், குவாட் பிக்சல் தொழில்நுட்பம், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :