நோக்கியாவின் புதிய Nokia 7.2 மற்றும் Nokia 6.2 ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

Updated on 06-Sep-2019

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி,ஹெச்.எம்.டி குளோபல் சில அம்ச தொலைபேசிகளையும், நோக்கியா பவர் இயர்பட்களையும் வெளியிட்டுள்ளது.கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு, 3,500எMah  பேட்டரி மற்றும் 3 பின்புற கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் வளைந்த எட்ஜ் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்களுடன் உள்ளன. வட்ட அமைப்பு கொண்ட மூன்று கேமரா சென்சார்கள் மற்றும்  எல்.இ.டி பிளாஷ் போன்றவற்றை கொண்டது. கேமரா தொகுதிக்கு கீழே, பின்புறத்தில் பிங்கர் பிரின்ட் சென்சார் இடம் பெற்றுள்ளது.

நோக்கியா 6.2 சிறப்பம்சம் 
இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்ட் 10 தயாராக இருப்பதாகவும், மூன்று வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓ.எஸ் திறனை மேம்படுத்தும் அம்சமும்  கிடைக்கும் எனவும் ஹெச்.எம்.டி குளோபல் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பச்சை, கரி, வெள்ளை ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா 6.2 ஐரோப்பாவில் 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 15,800 ரூபாய்) ஆரம்ப விலையை கொண்டு அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ளது. இது கருப்பு, வெள்ளை வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 249 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ .19,800) என்ற ஆரம்ப விலையுடன் இந்த மாதம் முதலே விற்பனைக்கு வரவுள்ளது.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்களில், இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. ஹெச்.டி.ஆர் 10 வசதி, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வு ஆகிய அம்சங்களுடன் 6.3-இன்ச் fullHD+ திரையை கொண்டுள்ளது.

இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3,500எம்.ஏ.ஹெச் அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88×75.11×8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.
Nokia  7.2 சிறப்பம்சம்.
நோக்கியா 7.2 சிறப்பம்சங்களை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88×75.11×8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :