Nokia வின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

Nokia வின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.
HIGHLIGHTS

நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது

இந்தியாவில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மார்ச் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது.

HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்தியாவில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மார்ச் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருந்தது.

புதிய அப்டேட் 859 எம்பி அளவில் இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 10 அம்சங்கள் மற்றும் ஜூன் 2020 செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் இந்தியா மட்டுமின்றி பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் 2019 ஜூன் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பாதுகாப்பு, தனியுரிமை அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் டார்க் தீம், பிரத்யேக பிரைவசி அம்சம் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டு உள்ளது. 

நோக்கியா 1 மாடலை தொடர்ந்து நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo